கட்சிக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை..!

1325

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்சிக்கு துரோகம் செய்த அனைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்
அதிமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமையகமான ராயப்பேட்டையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களை ஏமாற்றி தந்திரத்தின் மூலம் தினகரன் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார். தினகரன் ஒரு மாயமான் என்று விமர்சித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பணப் பட்டுவாடாவை தடுக்கும் சக்தி தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது என்று கூறினார்.