சுற்றுச்சூழல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்..!

137

சுற்றுச்சூழல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறப்பாக செயலாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி, 2014, 2015, 2016ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
திருவண்ணாமலை, தேனி, நீலகிரி, தர்மபுரி, கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை வழங்கி முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.