பொன்னேரியில் தடை செய்ய செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படாது – முதலமைச்சர் திட்டவட்டம்

176

பொன்னேரி பிளாஸ்டிக் பூங்காவில் தடை செய்ய செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படாது என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
சட்டப்பேரவையில் இன்று தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, பிளாஸ்டிக் தொழிற் பூங்காவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படாது என்று உறுதியளித்தார். அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். முன்னதாக பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 5 பேரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி நிதியுதவி அறிவித்தார். தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் போது, அவையில் பேசுவது மரபல்ல என ஸ்டாலின் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.