ஊரக மற்றும் நகர்ப்புற வீட்டு வசதியை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தும். – முதலமைச்சர் பழனிசாமி

398

ஊரக மற்றும் நகர்ப்புற வீட்டு வசதியை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் வீட்டுமனை விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊரக மற்றும் நகர்ப்புற வீட்டு வசதியை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்காக வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறினார். மேலும் வீட்டு வசதி, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, கட்டட திட்டங்களுக்கான அனுமதிகளை, ஒற்றை சாரளமுறை கீழ் 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இது தொடர்பான விதிமுறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.