மீனவர்களையும், 129 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

141

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 10 தமிழக மீனவர்களையும், 129 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 129 படகுகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர் கடத்தி சென்ற 10 தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மீனவர்களின் பிரச்சனைகளை, வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் வாயிலாக தீர்க்க பிரதமர் மோடி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்களின் சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ஆயிரத்து 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.