உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு ரூ5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு !

216

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிச்சாமி, உயிரிழந்த மீனவர் பிரிஜ்ஜோ குடும்பத்திற்கு ரூ5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம், மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிச்சாமி, அவரின் குடும்பத்திற்கு
ரூ5 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் துப்பாக்கி சூட்டால் படுகாயமடைந்து, ராமநாதபுரம் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வரும் மீனவர், சரோண்னுக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.