பொருளாதார தடை இரு நாடுகள் இடையிலான வர்த்தக போர் உண்டாகும் -ரஷ்ய பிரதமர்

262

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, வர்த்தக ரீதியான போரினை உண்டாக்கும் என்று ரஷ்ய பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த விவகாரம் உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொருளாதார தடை குறித்து ரஷ்ய பிரதமர் மெத்வதேவ் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், டிரெம்ப்பின் இந்த நடவடிக்கை இரு நாடுகள் இடையிலான உறவு மேம்படும் என்ற நம்பிக்கையை தளர்த்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தங்கள் மீதான பொருளாதார தடை இரு நாடுகள் இடையிலான வர்த்த போரினை உண்டாக்கும் என்றும் அந்த பதிவில் பிரதமர் மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.