உலகின் 6 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வங்கி தகவல்..!

1346

உலகின் 6 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

2017-ம் ஆண்டிற்கான பொருளாதார புள்ளி விபர அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 7 காலாண்டுகளாக சரிந்து வந்த இந்தியாவின் பொருளாதாரம் 2017 ம் ஆண்டு உயர்ந்துள்ளது என்றும், இதில், உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போதிலும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளதாகவும், இதனால், பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் 6 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

2032-ல் இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் 3வது இடத்தை பிடிக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.