21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு தொடங்குகிறது..!

945

இந்த நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ்வதையொட்டி, அதனை பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரியனுக்கும்-சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிலையில், இன்று ஏற்படும் முழு சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணமாக கருதப்படுகிறது. தொடர்ந்து 103 நிமிடங்கள் நீடிக்கும் இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு தொடங்கி, அதிகாலை 2.43 மணிக்கு முடிகிறது. நிலா இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முழு சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு சென்னை பிர்லா கோளரங்கம் மற்றும் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசிய நாடுகளில் ஒரே நேரத்தில் இந்த மிகப்பெரிய சந்திர கிரகணத்தை பார்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.