சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துக்களை தடுக்க முடியாது |தேர்தல் ஆணையம்

82

சமூக வலைதளங்களில் அரசியல் கருத்து தெரிவித்தால் அதை தடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை வெளியிட தடை விதிக்கும்படி வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் சாகர் என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணையின் போது , தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு விளம்பரங்களோ, பிரசாரமோ செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளதென்றும், ஆனால் தனிநபர் தனது சமூக வலை தளங்களில் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும் போது அவர்களை எப்படி தடுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.