ஈஸ்டர் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டம்

358

இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, பின்னர் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் நிகழ்வாக ஈஸ்டர் பண்டிகை உள்ளது. கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்திற்குப் பின்பு இந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை கிறிஸ்தவர்கள் இன்று உற்சாக கொண்டாடி வருகின்றனர். ஈஸ்டர் திருநாளையொட்டி நாடு முழுவதும் உள்ள தேவாயலங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் புத்தாடை அணிந்து, கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு பல்லாயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருப்பலி மற்றும் ஆராதனைகள் முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். டெல்லி, திருவனந்தபுரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திருப்பலிகளில் ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.