கிழக்கு கடற்கரை பகுதியில் சென்னையை சேர்ந்த இளம்பெண் மர்ம முறையில் மரணம்!

1265

சென்னையைச் சேர்ந்த இளம்பெண், கிழக்கு கடற்கரை பகுதியில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடப்பாக்கம் கடற்கரையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மணலில் பாதி புதைந்த நிலையில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் உடமைகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் சென்னையை சேர்ந்த ஜாகிரா என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண் எப்படி அங்கு வந்தார்?, யாரேனும் அவரை கொலை செய்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.