அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவலில், வடக்கு அலாஸ்கா பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.4 என்ற ரிக்டர் அளவுகோளில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை. அலாஸ்காவில் கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.