பப்புவா நியூ கினியா தீவுகளில் 6.9 என்ற ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

1560

பப்புவா நியூ கினியா தீவுகளில் 6.9 என்ற ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென் மேற்கு பசிபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.9 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். பூமிக்கடியில் சுமார் 300 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால், சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.