இ-சேவை மையங்களில் இனி பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படாது – தமிழக அரசு அறிவிப்பு..!

779

இ-சேவை மையங்களில் இனி பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு வழங்குவதை பிப்ரவரி 6ஆம் தேதி முதல் தடை செய்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.இதனால் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ள தமிழக அரசு,இனி பொதுமக்களின் ஆதார் அட்டையின் நகல் முழு தாளில் 12 ரூபாய்க்கு அச்சிட்டு வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.