எனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்? – துரைமுருகன் கேள்வி

145

தேர்தலுக்காக தனது மகனை லாரி ஏற்றி கொலை செய்ய திட்டமிடட்டது யார் என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது . மேலும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். அவர் கூட்டத்தில் பேசியபோது, எனது வீட்டில் பணத்தை வைத்துவிட்டு, வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தது யார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தலுக்காக தனது மகனை லாரி ஏற்றி கொலை செய்ய திட்டமிடட்டது யார் என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.