மேடையில் குலுங்கி குலுங்கி அழுத துரைமுருகன்..!

217

வேலூரில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் துரைமுருகன் குலுங்கி குலுங்கி அழுததால், தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் அனைத்துக் கட்சி சார்பில் வேலூரில் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அவர், கருணாநிதியின் மறைவு தனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். 56 ஆண்டு கால பொதுவாழ்வில், அவருடன் ஒன்றாக இருந்ததாக குறிப்பிட்ட துரைமுருகன், கருணாநிதிக்கு முன்னாள், தான் இறந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று குலுங்கி குலுங்கி அழுதார். இதனால் திமுக தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.