துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது!

336

துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
2019-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடர் துபாயில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு நிகராக பிரம்மாண்டமான முறையில் நடத்த துபாய் அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பெங்களூரில் நடைபெற்ற ஆசியக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி மக்காவ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 4 – 1 என்ற கோல் கணக்கில் மக்காவ் அணியை201710120042043030_1_asia-cup._L_styvpf வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி ஆசியக்கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.