துபாயில் சொகுசு கப்பலை மிதக்கும் நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ..!

3381

துபாயில் சொகுசு கப்பலை மிதக்கும் நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
துபாயில் சொகுசு கப்பலை மிதக்கும் நட்சத்திர ஓட்டலாக அந்நாட்டு அரசு மாற்றி அமைத்துள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பெயரைக் கொண்ட பிரமாண்டமான சொகுசு கப்பலை 10 ஆண்டுகளுக்கு முன்பே துபாய் அரசு வாங்கி ஓட்டலாக மாற்ற திட்டமிட்டது. பொருளாதார நெருக்கடியால் அப்போது ஒத்திவைக்கப்பட்ட திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு, மினா ரஷீத் துறைமுகத்தில் கப்பல் மிதக்கும் ஓட்டலாக மாற்றப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு 25 கடற்பயணங்களில் 25 லட்சம் பயணிகளை சுமந்து சென்ற அந்த கப்பல் இப்போது, ஆயிரத்து 300 அறைகள், 13 உணவகங்கள், பார்கள், சூதாட்ட அரங்குகள், அருங்காட்சியத்துடன் ஓட்டலாக உருமாறி பிரபலமைடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.