கடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்திய-துபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

365

கடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்திய-துபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
கடந்த 3-ஆம் தேதி துபாய் சர்வதேச விமான நிலையத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, இந்தியா-துபாய் இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், துபாய் விமான நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மீண்டும் இந்தியா – துபாய் இடையிலான விமான சேவை இன்று முதல் தொடங்கியது. இதனையடுத்து, டெல்லியில் இருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 9 விமானங்கள் உட்பட, ஏர் இண்டியா, ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ விமான நிறுவனங்களின் விமானங்களும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் துபாய் செல்லும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.