திருவனந்தபுரத்திலிருந்து சென்ற விமானம் துபாய் விமானநிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

474

திருவனந்தபுரத்திலிருந்து சென்ற விமானம் துபாய் விமானநிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கேரள மாநிலம் திருவனந்தரபுரத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன்
விமானம் ஒன்று துபாய்க்கு சென்றது. இன்று மதியம் ஒரு மணிக்கு துபாய் விமானநிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் முன்சக்கரம் திடீரென பழுதானது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி, எப்படியாவது விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சி செய்தபோது, விமானத்தின் மூக்குப்பகுதி தரையில் உரசியது. இதில், விமானத்தின் முன்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் விமானநிலையம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. விமானத்தின் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. விபத்தில் எவ்வாறு தீப்பிடித்தது, விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது