திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற விமானம் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து சர்வதேச குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

338

திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற விமானம் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து சர்வதேச குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் துபாயில் தரை இறங்கியபோது ஓடுதளத்தில் மோதி, தீப்பிடித்தது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக பயணிகள், விமானிகள் உள்பட 300 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சர்வதேச குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானியின் அறையில் பதிவான தகவல்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் பேசிய உரையாடல்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் பற்றிய முழு ஆய்வறிக்கை ஒரு மாதத்தில் அளிக்கப்படும் என்று விசாரணை குழுவினர் தெரிவித்துள்ளனர்.