சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மீறி கார் ஓட்டிய பெண்கள் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில் பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. இந்த மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று முதல் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கியுள்ளனர்.
இதனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.