ரூபாய் நோட்டுகள் குறித்தான மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, கோவையில் பல்வேறு தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

318

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடையே போராட்டங்கள் வலுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக கோவை காந்தி பூங்கா பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த எராளமானோர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொது மக்களையும், சிறு, குறு தொழில் முனைவோர்களையும் கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.