போதைப்பொருள் கைப்பற்றும் அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை!-உள்துறை அமைச்சகம்

411

போதைப்பொருள் மற்றும் மனநல மருந்துகளை கைப்பற்றும் அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, போதைப்பொருள் மற்றும் மனநல மருந்துகளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 20 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்தநிலையில், அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையை உயர்த்தி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் போதைப்பொருள் மற்றும் மனநல மருந்துகளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கூட பரிசோதனையில், போதைப்பொருள் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.