மருத்துவமனையில் ஜெயலலிதாவை 3 முறை சந்தித்ததாக அவரது கார் ஓட்டுனர் நீதிபதி முன் விளக்கம்..!

427

மருத்துவமனையில் இருந்து போது ஜெயலலிதாவை மூன்று முறை சந்தித்ததாகவும், அவர் தலையில் காயம் ஏதும் இல்லை என்றும், கார் ஓட்டுனர் ஐயப்பன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், இல்லத்தில் வேலை செய்தவர்கள், உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்தநிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான ஐயப்பன், விசாரணை ஆணையம் முன்பு 2வது முறையாக இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவை மூன்று முறை சந்தித்தாக கூறினார்.