சீனா எந்த ஆக்கிரமிப்பு பணிகளையும் மேற்கொள்ள வில்லை: மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் வி.கே.சிங்

265

டோக்லாமில் சீனா எந்த ஆக்கிரமிப்பு பணிகளையும் மேற்கொள்ள வில்லை என மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டோக்லாம் எல்லையில் சீன ராணுவம் கட்டமைப்புகளை மேற்கொண்டது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இருநாட்டு எல்லையிலும் அதிகப்படியான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டத்தால் பதற்றமான சூழல் உருவானது. இருப்பினும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி எல்லையில் மீண்டும் அமைதி திரும்பியது. இந்தநிலையில் மீண்டும் டோக்லாம் எல்லையில் சீனா ஆக்கிரப்பு செய்து கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகின.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், டோக்லாம் எல்லை அருகே சீனா எந்த ஆக்கிரமிப்பையும் மேற்கொள்ளவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.