கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்து படைத்தன.

306

கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்து படைத்தன.
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், பொமோரியன், சைபீரியன், டால்மேஷன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாய்கள் கண்காட்சியில் பங்கேற்றன. நாய்களின் தனித்திறன், அழகு, கீழ்படிதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நாய்க்கண்காட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.இதேபோன்று, நாய் கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்தவேண்டும் என்றும் சுற்றுலாப்பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.