அணிகளின் இணைப்பால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது-திமுக எம்பி. கனிமொழி!

295

அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பால், தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை என திமுக எம்பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் எதிர்காலம் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார். முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியும், விவசாயிகள் பிரச்சனை, நீட் தேர்வு விவகாரம் போன்ற தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க முன்வரவில்லை என கனிமொழி குற்றம்சாட்டினார். எனவே அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பால், தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.