திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு அக்டோபர் 12-ம் தேதிவரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

334

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தடையை அக்டோபர் 12 ஆம் தேதிவரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டுவந்தது தொடர்பாக பதிலளிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து, உரிமைக்குழுவின் நோட்டீசை ரத்து செய்யக்கோரி திமுக எம்எல்ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க செப்டம்பர் 14 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தடையை அக்டோபர் 12 ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.