மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளமக்களுக்கு திமுக சார்பில் 50 ஆயிரம் கிலோ அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து உதவி பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு அமைப்பினர் சார்பில் நிதி மற்றும் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவலயத்தில் இருந்து திமுக சார்பில் திரட்டப்பட்ட 50 ஆயிரம் கிலோ அரிசியை திமுக தலைவர் ஸ்டாலின் கொடி அசைத்து லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார். மேலும் தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் 2 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.