மத்திய அரசுடன், தமிழக அரசு இணக்கமாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, பினாமி ஆட்சி நடைபெறுவதாக குறைசொல்லி வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

1852

மத்திய அரசுடன், தமிழக அரசு இணக்கமாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, பினாமி ஆட்சி நடைபெறுவதாக குறைசொல்லி வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில், தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் லிமிடெட் சார்பில் 15வது மகா சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அமைப்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவால் 1991ம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறினார். இதன் மூலம் மீனவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மாட்டிறைச்சி தடை சட்டத்தை பொருத்தவரை, தமிழக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று ஜெயக்குமார் கூறினார். நலத்திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசுடன், தமிழக அரசு இணக்கமாக இருந்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இதனை பொறுக்க முடியாத திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பினாமி ஆட்சி நடைபெறுவதாக குறை கூறி வருவதை குறிப்பிட்டார்.