தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் : திமுக வலியுறுத்தல்

265

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் கமிட்டிக்கு, மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.