இளைஞர்களை முதல்வர் நேரில் சந்தித்து அவசர சட்டம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

141

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் இளைஞர்களை முதல்வர் நேரில் சந்தித்து அவசர சட்டம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் ஒட்டு மொத்த பங்கேற்புடன் இளைஞர்களும், மாணவர்களும் உருவாக்கிய எழுச்சிமிக்க போராட்டம் மத்தியமாநில அரசுகளை அசைய வைத்திருப்பதே தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க புரட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி என அவர் பாராட்டியுள்ளார்.

பொங்கல் விழாவிலேயே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்றியிருந்தால் மக்களின் போராட்டத்திற்கு அவசியமிருந்திருக்காது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவசர சட்டமே நிரந்தர சட்டம் என்று சொல்வதை தவிர்த்து , மாணவர்களின் கோபம் தணியும் வகையில் அவர்களிடம் முதல்வர் சட்டம் குறித்து விளக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அவசர சட்டம் போதுமானது என்றும், இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு நிரந்தர சட்டம் இயற்றப்படும் என முதல்வர் மாணவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும் என ஸ்டாலின் தனது அறிக்கையில் கேட்டுகொண்டுள்ளார்.