தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

244

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் தற்கொலை அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதே, விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
இது தொடார்பாக
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனவும், இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும்
தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணம் அடைந்தோரின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.