தி.மு.க.வினருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து, சேலம் மாநகர மேயர் முன்பு அமர்ந்து திமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

245

தி.மு.க.வினருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து, சேலம் மாநகர மேயர் முன்பு அமர்ந்து திமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் சவுண்டப்பன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக உறுப்பினர்கள் சேலம் மாநகராட்சியை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் மாண்பை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மேயர் சவுண்டப்பன் அறிவித்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியதோடு, மேயர் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தீர்மானத்தை திறும்ப பெற மாட்டோம் என அ.தி.மு.க.வினர் கோஷமிட்டதால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.