கோவை மாநகராட்சி, சூயஸ் நிறுவனத்துடன் இணைந்து போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி, சுமார் 600-க்கும் மேற்பட்ட திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி, சூயஸ் நிறுவனத்துடன் இணைந்து, வாரத்தின் ஏழு நாட்களிலும், 24 மணி நேரம் குடிநீர் வழங்குவதற்காக, 26 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தாசில்தார் அலுவலகம் முன்பு, சுமார் 600-க்கும் மேற்பட்ட திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசு மற்றும் மாநகராட்சியை கண்டித்து, கண்டன முழுக்கங்களை எழுப்பிய அவர்களை போலீசார் கைது செய்தனர்.