காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன..!

361

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக நடத்தும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சாலை மறியல், ரயில் மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில், இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. இதற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் பெரும்பாலான கடைகள், வணிக தளங்கள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடையடைப்பால் தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.