திருச்சியில் ஆய்வு பணி மேற்கொள்ள உள்ள ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்..!

332

திருச்சியில் ஆய்வு பணி மேற்கொள்ள உள்ள ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்யும் ஆளுநர், ஆய்வு பணிகளை மேற்கொள்வதோடு, மக்களை சந்தித்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆளுநர் திருச்சி வந்துள்ளார். ஆய்வு பணிகளில் அவர் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுலா மாளிகையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியில் திரண்டிருந்த திமுகவினர் கருப்பு கொடிகளை உயர்த்தி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையம், கல்மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இன்றுமாலை ஆய்வு செய்யும் ஆளுநர் பன்வாரிலால், பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.