ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

102

சென்னையில் இன்று ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றபின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் .அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் குறித்தும், மக்களவைத் தேர்தல் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.