திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை தொடக்கம்..!

137

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், அக்கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறுகிறது.

சென்னை அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் அவசர செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க ஆயிரத்து 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், கருணாநிதியின் மறைவிற்கு, மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பொதுக்குழுவை கூட்டுதல், தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்தல் மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைத்தல், மு.க.அழகிரி பொறுப்பு வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.