திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்து 21 ஆம் நூற்றாண்டு வரை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகழாரம் .

368

திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்து 21 ஆம் நூற்றாண்டு வரை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா மற்றும் பிறந்த நாள் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் ஆர்காடு வீராசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்து 21 ஆம் நூற்றாண்டு வரை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புகழாரம் சூட்டினார்
நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, பாடல் ஒன்றுக்கு 85 நிமிடம் எடுத்து கொல்லும் தனக்கு கருணாநிதியை பற்றி எழுதுவதற்கு 80 நாட்கள் ஆகிவிட்டதாக தெரிவித்தார்.தமிழர்களை கோபுரத்துக்கு கொண்டு சென்றவர் கருணாநிதி என்றும் கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்