தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

300

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ம் தேதி கருணாநிதிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, இரவு 11 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை, நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, டிரக்கியா ஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தற்போது அவர் இயல்பாக சுவாசிக்கிறார் என்றும், உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 2 நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என தெரிகிறது.

மருத்துவமனையில் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.அழகிரி, ஆ.ராசா, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, குமரிஅனந்தன்,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, உள்ளிட்டோர் நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தனர்.