குடியரசு தலைவருடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சந்திப்பு..!

437

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து, தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி எம்பிக்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று நேரில் சந்தித்து பேசினர். கனிமொழி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்எஸ் பாரதி, காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா மற்றும் இடது சாரி எம்பிக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று. குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.