2017-18 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது.

175

2017-18 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது.
தமிழக சட்டசபையில், 2017 – 18ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் ஜெயக்குமார், கடந்த 16 ஆம் தேதி தாக்கல் செய்தார். இதையடுத்து மூன்று நாள் விடுமுறைக்கு பின், இன்று, சட்டசபை கூடுகிறது. முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் மறைவுக்கு, இரங்கல் தெரிவிப்பு தீர்மாணம் முடிந்த பிறகு அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தின் போது, தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்னை, ‘நீட்’ நுழைவுத் தேர்வு போன்றவற்றை எழுப்ப, தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். மேலும், சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, ஓட்டெடுப்பு நடத்தும்படியும் எதிர்கட்சியினர் வலியுறுத்த உள்ளனர்.