புதிய தேசிய வரைவு கல்விக்கொள்கை ஆய்வு – திமுக குழு அறிவிப்பு

93

புதிய தேசிய வரைவு கல்விக்கொள்கை குறித்து ஆராய்வதற்கு திமுக சார்பில் 8 பேர் கொண்ட தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தேசிய வரைவு கல்வி கொள்கை குறித்து ஆராய்வதற்கு, திமுக சார்பில், முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொன்முடி தலைமையிலான 8 பேர் குழு, 10 நாளில் புதிய தேசிய வரைவு கல்விக்கொள்கை குறித்து, ஆய்வு செய்து அறிக்கையை கட்சித் தலைமையிடம் வழங்கும் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின்,

குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்த கருத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.