திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்படும்

86

மக்களவைத் தேர்தல், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை 4 அல்லது 5 நாட்களில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். 20 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.