தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..!

104

வேலூர் தொகுதியில் நாளை மனுதாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் 3 பேர் விரைவில் வருகை தர உள்ளனர்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க.வில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், கதிர் ஆனந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், வேலூர் மக்களவைத் தொகுதியில், தி.மு.க.-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதென குறிப்பிட்டார்.

இதனிடையே வேலூர் தொகுதிக்கான சிறப்பு செலவின பார்வையாளரை, முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியான முரளிகுமாரை நியமித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் செலவின பார்வையாளராக வினய்குமார்சிங், ஆர்.ஆர்.என்சுக்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் 3 பேரும் வேலூருக்கு வருகை தர உள்ளனர். 1553 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 20 கம்பெனி துணை ராணுவ படை வரவழைக்க முடிவு செய்துள்ளனர்.