கருணாநிதி நினைவிடத்தில் குவிந்த திமுக தொண்டர்கள்..!

293

திமுக கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் .

சென்னையில் திமுக பொதுக்குழுவை அடுத்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இன்று காலை முதலே பொதுமக்கள், திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நீண்ட வரிசையில் நின்று, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்து சிறப்பாக செயல்படும் என தெரிவித்துள்ள அக்கட்சி தொண்டர்கள், மு.க.அழகிரி விவகாரத்தை பொறுத்த வரை கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு மதிப்பளிப்போம் என்றும் கூறியுள்ளனர். மேலும், கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து செயல் பட்டால் தான் கட்சியை பலப்படுத்த முடியும் என்றும் திமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.