கட் அவுட்களுக்கு தி.மு.க. கட்டுப்பாடு..!

312

பொதுக்கூட்டங்களின் போது கட் அவுட், பேனர் வைத்து பொதுச்சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்று தொண்டர்களுக்கு தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. நிகழ்ச்சிகளில் பேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகள் என அளவின்றி விளம்பரங்கள் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சி நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளை முக்கிய இடங்களில் வைத்தால் போதும் என்றும், கட்சித் தலைமையின் அறிவுரைகளை நிர்வாகிகள் மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.